'விக்ரம்' டிரைலர் சாதனையை முறியடித்த 'தக் லைப்' டிரைலர் | நயன்தாரா நடிப்பது பற்றிய வீடியோ, 'இவ்ளோ சுமாரா' எடுத்திருக்க வேண்டுமா? | ஆட்டுக்கார அலமேலு, முத்து, தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் - ஞாயிறு திரைப்படங்கள் | தக் லைப் டிரைலர் வெளியீடு : நீயா... நானா... என மோதும் கமல், சிம்பு! | தெலுங்கு தயாரிப்பு, இயக்குனர் படத்தில் ரஜினிகாந்த்? | பால்கே பயோபிக் ; ராஜமவுலி குழுவினர் சந்திக்கவேயில்லை - பால்கே பேரன் | குபேரா - தமிழக உரிமை வியாபாரம் எவ்வளவு தெரியுமா ? | இளையராஜா 'ரெபரன்ஸ்' : இரண்டு 200 கோடிகளை அள்ளிய மலையாளப் படங்கள் | குடும்பத்தை பிரித்தேனா... பொய்யான குற்றச்சாட்டு : மகளுடன் சேர்ந்து வாழ ரவி மோகனுக்கு மாமியார் கோரிக்கை | மே 24ல் ஜப்பானில் ரிலீஸ் ஆகும் டூரிஸ்ட் பேமிலி |
ராம்தேவ் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் 'மூன்றாம் மனிதன்'. இயக்குனர் கே. பாக்யராஜ் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக பிரதான வேடத்தில் நடிக்கிறார். எந்த சாட்சியும் இல்லாமல் மர்மமாக நடக்கும் ஒரு கொலையை எப்படி துல்லியமாக பலவித டிடெக்டிவ் வேலைகள் செய்து கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. பாக்யராஜ் உடன் சோனியா அகர்வால், ஸ்ரீநாத், சூது கவ்வும் சிவக்குமார், பிரணா, ரிஷிகாந்த், ராம்தேவ், ராஜகோபாலன், மதுரை ஞானம் ஆகியோர் நடிக்கின்றனர்.
வேணு சங்கர், தேவ்ஜி பாடலுக்கு இசை அமைக்கிறார்கள். பின்னணி இசையை பி.அம்ரிஷ் அமைக்கிறார். ராம்தேவ் படத்தின் கதை, பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார். படம் பற்றி அவர் கூறும்போது “சஸ்பென்ஸ் த்ரில்லருடன் ஒரு குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் நடக்கும் அன்றாட பிரச்னைகளும் இதில் அலசப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பு தேனி, கொடைக்கானல், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்துள்ளது” என்றார்.