பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | 'தங்கலான், கங்குவா' படங்களைத் தொடர்ந்து 'வா வாத்தியார்' படத்திற்கும் சிக்கல் | 'சிக்மா' படத்தில் நடிக்கிறாரா ஜேசன் சஞ்சய் ? | முதலாம் ஆண்டு திருமண நாளில் திருமண வீடியோவை வெளியிட்ட நாக சைதன்யா, சோபிதா துலிபலா | கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்ட 'அகண்டா 2' | ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி |

ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படம் 'கேம் சேஞ்சர்'. கடந்த சில வருடங்களாக இடைவெளி விட்டு, இடைவெளி விட்டு இப்படம் படமாகி வருகிறது. அடுத்த ஆண்டு இப்படம் எப்படியும் வெளிவந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ராம் சரண் ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காக படத்தின் முதல் சிங்கிளான 'ஜரகண்டி' பாடலை தீபாவளிக்கு வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால், தற்போது அதைத் தள்ளி வைக்கிறோம் என அறிவித்துள்ளார்கள்.
இது குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இருவேறு நிறுவனங்களின் 'டாகுமென்டேஷன்' காரணமாக, தவிர்க்க முடியாத காரணங்களால் 'கேம் சேஞ்சர்' படத்தின் 'ஜரகண்டி' பாடல் வெளியீட்டைத் தள்ளி வைக்கிறோம். வேறொரு நாளில் இது குறித்த அப்டேட்டுன் மீண்டும் வருகிறோம். ராம் சரண் ரசிகர்களின், ஷங்கர் ரசிகர்களின் காத்திருப்புக்கு இது மதிப்பானது. 'கேம் சேஞ்சர்' குறித்து வர உள்ள ஒவ்வொன்றும் சிறப்பானவை. உங்களை மகிழ்விக்க நிகரற்ற தரத்துடன் நான் ஸ்டாப் ஆக குழுவினர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்தத் தள்ளி வைப்பு ராம் சரண் ரசிகர்களை மிகவும் வருத்தமடைய வைத்துள்ளது. 'ஜரகண்டி' பாடலுடன் தீபாவளியைக் கொண்டாடலாம் எனக் காத்திருந்தவர்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள். 'ஜரகண்டி' எனப் பெயர் வைத்துவிட்டு தாமதம் செய்கிறார்களே என கோபமடைந்துள்ளார்கள்.