50வது நாளில் 'டூரிஸ் பேமிலி' | பி.எம்.டபிள்யூ எக்ஸ்-1 காரை வாங்கிய நடிகர் விதார்த்! | தனி விமானம் வாங்கினாரா சின்னத்திரை நடிகை? | சூர்யா 45வது படத்தின் டைட்டில் 'கருப்பு': போஸ்டர் வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி! | கன்னடத்தில் அடி எடுத்து வைத்த 'அனிமல்' பட நடிகர் உபேந்திரா | 'தி ராஜா சாப்' டீசரை விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஹைதராபாத் போக்குவரத்து போலீஸ் | அடுத்த தலைமுறைக்கு இதைத்தான் கொடுக்க போகிறோமா ? நடிகை மஞ்சிமா காட்டம் | மம்முட்டி நலமாக இருக்கிறார் ; ராஜ்யசபா எம்பி வெளியிட்ட தகவல் | அமீர்கான் படக்குழுவினரை நேரில் சந்தித்து உற்சாகப்படுத்திய ஷாருக்கான் | கவர்ச்சி ஆட்டத்தில் இறங்கிய காயத்ரி |
ராம்தேவ் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் 'மூன்றாம் மனிதன்'. இயக்குனர் கே. பாக்யராஜ் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக பிரதான வேடத்தில் நடிக்கிறார். எந்த சாட்சியும் இல்லாமல் மர்மமாக நடக்கும் ஒரு கொலையை எப்படி துல்லியமாக பலவித டிடெக்டிவ் வேலைகள் செய்து கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. பாக்யராஜ் உடன் சோனியா அகர்வால், ஸ்ரீநாத், சூது கவ்வும் சிவக்குமார், பிரணா, ரிஷிகாந்த், ராம்தேவ், ராஜகோபாலன், மதுரை ஞானம் ஆகியோர் நடிக்கின்றனர்.
வேணு சங்கர், தேவ்ஜி பாடலுக்கு இசை அமைக்கிறார்கள். பின்னணி இசையை பி.அம்ரிஷ் அமைக்கிறார். ராம்தேவ் படத்தின் கதை, பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார். படம் பற்றி அவர் கூறும்போது “சஸ்பென்ஸ் த்ரில்லருடன் ஒரு குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் நடக்கும் அன்றாட பிரச்னைகளும் இதில் அலசப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பு தேனி, கொடைக்கானல், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்துள்ளது” என்றார்.