சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' |
இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிக்கும் படம் 'புளூ ஸ்டார்'. இதில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், பிருத்விராஜ், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். எஸ்.ஜெயகுமார் இயக்குகிறார். கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார், தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படம் வட சென்னை இளைஞர்களிடையே நடக்கும் லோக்கல் கிரிக்கெட் போட்டியை மையமாக கொண்டு தயாராகி வருகிறது. கிரிக்கெட் போட்டி என்கிற பெயரில் இளைஞர்களை மோதவிட்டு அதில் அரசியல்வாதிகளும், உள்ளூர் பெரிய மனிதர்களும் எப்படி குளிர் காய்கிறார்கள் என்பதை பற்றிய படம். 'புளூ ஸ்டார்' என்பது அசோக் செல்வனின் கிரிக்கெட் அணியின் பெயர்.
அசோக் செல்வன் லேத் பட்டறையில் வேலை செய்பவராகவும், கீர்த்தி பாண்டியன் பள்ளி மாணவியாகவும் நடித்துள்ளனர். இருவரும் காதலர்களாக நடித்துள்ளனர். இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு நிஜ கணவன் மனைவி ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.