Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிறந்தநாளில் திருமணத்திற்கு சம்மதித்த அமலாபால் : மகிழ்ச்சியில் காதலர்

26 அக், 2023 - 01:21 IST
எழுத்தின் அளவு:
Amalapaul-who-agreed-to-get-married-on-her-birthday:-Lover-happy

தமிழ் சினிமாவில் 'மைனா' படம் மூலம் பிரபலமானவர் மலையாள நடிகை அமலா பால். அதன்பின் “தெய்வத் திருமகள், தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, பசங்க 2, வேலையில்லா பட்டதாரி 2' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இயக்குனர் விஜய்யைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், இரண்டு வருடங்களிலேயே இருவரும் விவகாரத்து செய்துவிட்டனர். அமலா பாலுக்கும் பாடகர் பவிந்தர் சிங் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றதாகச் செய்திகள் வெளியாகின. பவிந்தர் திருமணப் புகைப்படங்களைப் பகிர்ந்து பின்னர் அதை 'டெலிட்' செய்துவிட்டார்.

தற்போது ஜகத் தேசாய் என்பவர் இன்ஸ்டா தளத்தில் அமலா பாலுடன் இருக்கும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்து, “என்னுடைய ஜிப்ஸி குயின் 'சரி' என்று சொல்லிவிட்டார். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மை லவ்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இன்று அமலா பாலின் பிறந்தநாள். அதனால் பிறந்தநாளில் ரெசார்ட் ஒன்றில் அமலாபாலுக்கு பார்ட்டி கொடுத்த ஜெகத் தேசாய் சர்ப்ரைஸாக தனது காதலையும் வெளிப்படுத்தினார். அமலாபாலும் அதை மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொள்ள இருவரும் முத்தம் கொடுத்து கொண்டதோடு மோதிரமும் மாற்றிக் கொண்டார். இதுதொடர்பான வீடியோவை அமலாபால் இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார். விரைவில் இவர்கள் திருமணம் நடைபெற உள்ளது.

இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் 68வது படத்தின் கதை லீக்கானதுவிஜய் 68வது படத்தின் கதை லீக்கானது இரண்டல்ல.. மூன்று படம் வந்தாலும் ஜப்பான் தாக்கு பிடிக்கும் : தயாரிப்பாளர் நம்பிக்கை இரண்டல்ல.. மூன்று படம் வந்தாலும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in