பிரபல மலையாள நடிகரான பகத் பாசில், சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் போன்ற படங்களில் நடித்தவர், தற்போது ரஜினியின் 170வது படத்திலும் வில்லனாக நடிக்கிறார். மாமன்னன் படத்தில் பகத் பாசிலின் நடிப்புக்கு கிடைத்த வரவேற்பை பார்த்தே இந்த படத்தில் அவரை வில்லனாக ஒப்பந்தம் செய்திருக்கிறார் இயக்குனர் ஞானவேல். அந்த வகையில், இப்படத்தில் நடிப்பதற்கு பகத் பாசிலுக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இதேபோன்று விஜய்யின் லியோ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியிருக்கும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திற்கு லியோவில் வில்லனாக நடிப்பதற்கு 8 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்துள்ளார்கள்.