2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

சத்தீஸ்கர் மாநில அரசு திருமணமான பெண்களுக்கு மஹ்தாரி வந்தன் யோஜனா என்ற திட்டத்தின் அடிப்படையில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த தொகை நடிகை சன்னி லியோனுக்கும் கொடுக்கப்பட்டு வரும் தகவல் வெளியானதை அடுத்து, திரைப்படங்களில் நடித்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் சன்னி லியோனுக்கு மாதந்தோறும் ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டுமா? அதுவும் சன்னி லியோன் கனடா நாட்டைச் சேர்ந்தவர் . அவருக்கு எதற்காக சத்தீஸ்கர் மாநில அரசு உதவி தொகை வழங்குகிறது என்று சோசியல் மீடியாவில் அதற்கு எதிரான கருத்துக்கள் பதிவாகி வந்தன.
இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநில அரசு அதிகாரிகள் இதை ஆராய தொடங்கினர். அப்போதுதான் நடிகை சன்னி லியோனின் பெயரில் வீரேந்திர ஜோஷி என்ற நபர் 1000 ரூபாய் உதவி தொகையை பெற்று வருவது தெரியவந்துள்ளது. அதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டு, எந்தெந்த அதிகாரிகள் மூலமாக இப்படி இன்னொருவரின் பெயரில் அவர் உதவி தொகை பெற்று வருகிறார் என்பது குறித்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது .