பவதாரிணிக்கு இசை அஞ்சலி செலுத்திய ஷாலினி | அருள்நிதிக்கு ஜோடியாகும் தன்யா ரவிச்சந்திரன்! | தரைமட்டமானது சென்னை அடையாளங்களில் ஒன்றான உதயம் தியேட்டர் | வலைதளங்களில் வைரலான அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ | பழசை மறக்காத சூரி | ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் எக்ஸ் கணக்கு | இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29வது படம்! | ஆண் குழந்தை தான் வாரிசுக்கு அடையாளமா... சிரஞ்சீவி பேச்சால் சர்ச்சை | 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழாவை தனுஷ் புறக்கணித்தது ஏன்? | நான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன் - இசையமைப்பாளர் தேவா |
பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன். தமிழிலும் ஓரிரு படங்களில் நடித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு சார்பில் திருமணமான பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1000 தொகையை பெறுவதற்கான அரசு விண்ணப்பத்தில் சன்னி லியோன் பெயரும் குறிப்பிட்டு ஆன்லைனில் வங்கி கணக்கு தொடங்கி அரசின் திட்டங்களை பெற்று வந்தது அதிர்ச்சி அடைய வைத்தது.
சன்னி லியோனின் பெயரில் வீரேந்திர ஜோஷி என்ற நபர் 1000 ரூபாய் உதவி தொகையை பெற்று வருவது தெரியவந்துள்ளது. அதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டார். அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனை அறிந்த சன்னி லியோன் இது குறித்து வெளியிட்ட பதிவில், "சத்தீஸ்கரில் என் பெயரையும், என் அடையாளத்தையும் தவறாக பயன்படுத்தி பெண்களுக்கு பயனளிக்கும் அரசின் திட்டத்தை தவறாக பயன்படுத்தி இருப்பது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.