லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
இந்தியத் திரையுலகத்தில் ஒரு காலத்தில் 100 கோடி வசூலைப் பெறுவதென்பதுதான் ஒரு சாதனையாகக் கருதப்பட்டது. அதன் பிறகு அது 500 கோடிக்குச் சென்று இப்போது 1000 கோடி என்பதே பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.
இந்தியத் திரையுலகத்தில் இதுவரையில் 'டங்கல் (2016)', 'பாகுபலி 2 (2017)', 'ஆர்ஆர்ஆர் (2022)', 'கேஜிஎப் 2 (2022)', 'பதான் (2023)' ஆகிய திரைப்படங்கள் 1000 கோடி வசூலைக் கடந்துள்ளன.
தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரையில் 500 கோடி வசூலைக் கடந்த படங்களாக '2.0 மற்றும் பொன்னியின் செல்வன் 1', 400 கோடி வசூலைக் கடந்த படமாக 'விக்ரம்', 300 கோடி வசூலைக் கடந்த படமாக 'பொன்னியின் செல்வன் 2' ஆகிய படங்கள் உள்ளன.
200 கோடி வசூலைக் கடந்த படங்களாக விஜய் நடித்து வெளிவந்த ‛மெர்சல் (2017), சர்க்கார் (2018), பிகில் (2019), மாஸ்டர் (2021), பீஸ்ட் (2022), வாரிசு (2023)' ஆகிய 6 படங்கள் உள்ளன. ரஜினியின் 200 கோடி படங்களாக ‛எந்திரன் (2010), கபாலி (2016), 2,0 (2018), பேட்ட (2019), தர்பார் (2020), ஜெயிலர் (2023)' ஆகிய 6 படங்கள் உள்ளன. 200 கோடி வசூலைப் பொறுத்தவரை இருவரும் தற்போது சம நிலையில் உள்ளனர்.
ஆனால், விஜய் நடித்து அடுத்து வெளிவர உள்ள 'லியோ' படமும் 200 கோடி வசூலை நிச்சயம் கடக்கும் என இப்போதே பாலிவுட்டில் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இருப்பினும் அதிக வசூலில் 500 கோடி வசூலைக் கடந்த சாதனையை முதலில் படைத்தவர் என்பதில் ரஜினிகாந்த் உச்சத்தில் இருக்கிறார். அந்த வசூலை விஜய் படங்கள் கடக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.