அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு துவங்கியது | திருமுருகன் கொடுத்த சர்ப்ரைஸ் : பாண்டி கமல் நெகிழ்ச்சி | தலைமை செயலகத்தில் நுழைவதற்காக முற்றிலும் புதிதாக மாறிய ஸ்ரேயா ரெட்டி | மாரி 2 படத்துக்கு பின் தமிழில் நடிக்காதது ஏன் ? - டொவினோ தாமஸ் விளக்கம் | பிரபாஸ் ஒதுக்கிய வாய்ப்பால் கிடுகிடு வளர்ச்சி அடைந்த அல்லு அர்ஜுன் | 'ராமாயணா' படத்திற்கு புதிய சர்ச்சை | 2024ன் முதல் வசூல் படமாக 'அரண்மனை 4' | அஸ்வினியின் 'கங்கணம்' | பய்யா ஜி: மனோஜ் பாஜ்பாயின் 100வது படம் | வெற்றி நடிக்கும் 'ஆண்மகன்' |
முத்தையா இயக்கிய விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி. முதல் படமே வெற்றி பெற்ற நிலையில், அதையடுத்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அவர் நடித்த மாவீரன் படமும் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அடுத்தபடியாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நடிக்கும் படத்தில் தற்போது நடித்து வருகிறார் அதிதி. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற நிலையில் , இரண்டாம் கட்ட படப்பிடிப்பு போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள லிஸ்பன் என்ற நகரில் நடைபெற உள்ளது. இதற்காக நேற்று அப்படக்குழுவினருடன் அதிதி ஷங்கரும் போர்ச்சுக்கல்லுக்கு பறந்துள்ளார். அங்கு இப்படத்தின் படப்பிடிப்பை ஒரு மாதம் முகாமிட்டு நடத்திவிட்டு அதன் பிறகு சென்னை திரும்ப உள்ளார்கள்.