'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் |
தெலுங்கு திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சுனில். 2010ல் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான மரியாத ராமண்ணா என்கிற படத்தில் கதாநாயகனாக மாறிய பின் இவரது திரையுலக வாழ்க்கையும் எதிர்பாராத விதமாக திசை மாறிவிட்டது. அதாவது அதற்கு முன்பாக வருடத்திற்கு 25 படங்களுக்கு குறையாமல் நடித்து வந்த சுனில், மரியாத ராமண்ணா படத்தில் ஹீரோவாக நடித்த பிறகு அதற்கு அடுத்து வந்த பத்து வருடங்களில் மொத்தமே 25 படங்களில் மட்டுமே நடித்தார். அவர் ஹீரோவாக நடித்து விட்டதால் பெரிய அளவில் நகைச்சுவை கதாபாத்திரங்கள் அவரை தேடி வரவில்லை.
இந்த நிலையில் தான் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் அல்லு அர்ஜுனன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் வில்லனாக வித்தியாசமான தோற்றத்தில் நடித்து இருந்தார் சுனில். இந்த படம் மூலம் அவருக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து மீண்டும் அவரது திரையுலக பயணம் வில்லன், குணச்சித்திர நடிகர் என மீண்டும் பிஸியாக மாறியது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் தெலுங்கை விட தமிழில் தான் அதிக அளவு படங்களில் நடித்து வருகிறார் சுனில்.
அந்த வகையில் இந்த ஜூலை மாதம் சிவகார்த்திகேயனுடன் இவர் இணைந்து நடித்துள்ள மாவீரன் ரிலீஸ் ஆகிறது. ஆகஸ்டில் ரஜினிகாந்த்துடன் நடித்துள்ள ஜெயிலர், செப்டம்பரில் விஷாலுடன் நடித்துள்ள மார்க் ஆண்டனி, அக்டோபரில் கார்த்தியுடன் நடித்த ஜப்பான் என அடுத்தடுத்த மாதங்களில் சுனில் நடித்துள்ள நான்கு படங்கள் வரிசையாக ரிலீஸாக இருக்கின்றன. நான்குமே பெரிய படங்கள் என்பதால் இந்த படங்களில் கிடைக்கும் வரவேற்பை தொடர்ந்து தமிழ் சினிமாவில் சுனில் நிரந்தரமாக ஒரு இடத்தை பிடிப்பார் என தெரிகிறது.