அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா |

நடிகை திரிஷா திரையுலகில் நுழைந்து இந்த 20 வருடங்களில் தற்போதும் முன்னணி நடிகையாகவே வலம் வருகிறார். அடுத்தடுத்து வெளியான பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்கள் மூலமாகவும் திரிஷா இன்னும் அசைக்க முடியாத நடிகையாக மாறியுள்ளார். இன்னொரு பக்கம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்திலும் 'ஹே ஜூட்' என்கிற படத்தில் கதாநாயகியாக நுழைந்த திரிஷா, அதைத்தொடர்ந்து ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் உருவாகும் ராம் என்கிற படத்தில் நடிக்கிறார், மூன்று வருடங்களுக்கு முன்பே துவங்கப்பட்ட இந்த படம் இன்னும் முடிவடையாத நிலையில் இருக்கிறது,
இதைத் தொடர்ந்து தற்போது மலையாளத்தில் மூன்றாவதாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான பாரன்சிக் என்கிற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.. இந்த படத்தை அகில் பால் மற்றும் அனாஸ்கான் என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்கியிருந்தனர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அவர்கள் மீண்டும் டொவினோ தாமஸ் நடிப்பில் ஐடென்டி என்கிற படத்தை இயக்க உள்ளனர்.
இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க திரிஷாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனராம். அனேகமாக இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இன்னொரு கதாநாயகியாக முக்கிய வேடத்தில் மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




