அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா |

துரோகி, இறுதிச்சுற்று, சூரரைப்போற்று உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சுதா கொங்கரா. தற்போது சூரரைப்போற்று படத்தை ஹிந்தியில் ரீ-மேக் செய்து வருகிறார். அக்ஷய் குமார் நாயகனாக நடிக்கிறார். சிறப்பு வேடத்தில் சூர்யா நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். சுதாவிற்கு இன்று(ஜூலை 5) பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.
அதில், ‛‛பிறந்தநாள் வாழ்த்துகள் சுதா. சூரரைப்போற்று ஹிந்தி ரீ-மேக்கில் நீங்கள் நிகழ்த்திய மேஜிக்கை இந்த உலகம் காண நானும் காத்திருக்கிறேன். அந்தபடம் பாலிவுட்டையே திரும்பி பார்க்க வைக்கும். அடுத்து உங்களின் தமிழ்படம் என குறிப்பிட்டு நெருப்பு இமோஜியை'' பதிவிட்டுள்ளார்.




