''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
மலையாளத்தில் நடிகர் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ் ஹீரோவான அறிமுகமான 'முதுகாவ்' என்கிற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அர்த்தனா பினு. இதைத்தொடர்ந்து தமிழுக்கு வந்த அர்த்தனா, சமுத்திரக்கனியின் தொண்டன், ஜிவி பிரகாஷ் உடன் செம ஆகிய படங்களில் நடித்தாார். கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் அவரது முறைப்பெண்ணாக நடித்த போது ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டு வரவேற்பை பெற்றார்.
இவர் மலையாள குணச்சித்திர நடிகரான விஜயகுமார் என்பவரின் மகள். ஆனால் இவரும், இவரது தாயும் விஜயகுமாரிடம் இருந்து கடந்த 10 வருடங்களாக பிரிந்து வாழ்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் தங்களது வீட்டுக்குள் தனது தந்தை விஜயகுமார் அத்துமீறி நுழைந்து தங்களை மிரட்டி சென்றதாக குற்றம் சாட்டியுள்ளார் அர்த்தனா பினு. இது பற்றி அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தன் தந்தை வந்து மிரட்டிச் சென்ற வீடியோவையும் பதிவிட்டு கூடவே உருக்கமான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறும்போது, 'நடிகர் விஜயகுமார் என்னுடைய தந்தை தான். ஆனால் நானும் என் தாயும் அவரிடம் இருந்து 10 வருடங்களுக்கு முன்பு இருந்தே பிரிந்து வாழ்கிறோம். இப்போது இருக்கும் வீடு எங்களுக்கு சொந்தம் என நாங்கள் கொடுத்துள்ள வழக்கு தற்போது கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. ஆனால் அவர் அவ்வப்போது வந்து எங்களை மிரட்டி செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இப்போது கூட எங்கள் வீட்டின் கதவுகள் பூட்டி இருந்ததால் சுவர் ஏறிக்குதித்து வீட்டிற்குள்ளே வந்து திறந்திருந்த ஜன்னல் வழியாக எங்களை மிரட்டினார்.
குறிப்பாக நான் சினிமாவில் நடிக்க கூடாது என்றும் அப்படியே நடித்தாலும் அவர் சொல்லுகின்ற படங்களில் தான் நடிக்க வேண்டும் என்றும் மிரட்டினார். அதுமட்டுமல்ல எனது அம்மாவும் பாட்டியும் என்னை பணம் சம்பாதிப்பதற்காக நடிக்க வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் என்றும் அபாண்டமாக பேசினார். நான் என்னுடைய விருப்பத்தின் பேரில், சினிமாவின் மீதான ஆர்வத்தின் காரணமாகத்தான் நடித்து வருகிறேன். பணத்திற்காக யாரும் என்னை நடிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தவில்லை. இவர் இப்படி அத்துமீறி நுழைவது குறித்து பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அவர்கள் ஒருபோதும் எந்த நடவடிக்கையும் எடுத்தது இல்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர்” என்று கூறியுள்ளார்.