சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் | தங்கர் பச்சான் மகன் படத்தில் நடிக்கும் போது வலியை அனுபவித்து அழுதேன்: ஷாலி | எனது கதையைத்தான் திருடி இருக்கிறார்கள் : 'லாபத்தா லேடிஸ்' கதாசிரியர் குற்றச்சாட்டு | சினிமாவில் நடிப்பது எனது தனிப்பட்ட முடிவு : குஷ்பு மகள் அவந்திகா சொல்கிறார் | பிளாஷ்பேக்: முதல் செஞ்சுரி அடித்த சிவாஜி | பிளாஷ்பேக் : ஒரே படத்துடன் காணாமல் போன நடிகை | 'ஸ்டன்ட் டிசைன்' ஆஸ்கர் விருது அறிவிப்பு: ராஜமவுலி மகிழ்ச்சி | சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பவன் கல்யாண் மகன் | ஹாலிவுட் திரைப்படங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கும் சீனா | 2028 முதல் ஆஸ்கர் விருதுகளில் சேர்க்கப்படும் 'ஸ்டன்ட் டிசைன்' |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவு பகுதியை நெருங்கி விட்டது. வரும் அக்டோபர் மாதம் படம் ரிலீஸாக உள்ளது. லோகேஷ் கனகராஜை பொருத்தவரை தன்னுடைய படங்களில் ஹீரோ மட்டுமல்லாது அதில் இடம்பெறும் ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர். அதே சமயம் சில நிமிடமே வந்து போகும் கதாபாத்திரங்களில் கூட மிகப்பெரிய நடிகர்களை அழைத்து நடிக்க வைப்பவர். இதற்கு முன் அவர் கமலை வைத்து இயக்கிய விக்ரம் படத்தில் கிளைமாக்ஸில் வெறும் சில நிமிடங்களில் மட்டும் ரோலக்ஸ் என்கிற கதாபாத்திரத்தில் சூர்யா நடித்ததும் அப்படித்தான். ஆனால்சில நிமிடங்களே என்றாலும் அந்த ரோலக்ஸ் கதாபாத்திரம் சூர்யாவுக்கு மிகப்பெரிய பெயரைப் பெற்றுத் தந்தது.
அந்த வகையில் தற்போது லியோ படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் இணைந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹிந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் தோன்றுகிறார். இப்போது நடிகர் தனுஷ் மற்றும் ராம் சரண் ஆகியோரும் இதில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் லியோ படப்பிடிப்பின்போது மதிய விருந்தில் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய்யுடன் ராம்சரண் கலந்து கொண்டார் என்று கூறி ஒரு புகைப்படமும் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து தான் இந்தப் படத்தில் ராம்சரணும் ஒரு முக்கியமான கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்கிற தகவல் வெளியாக துவங்கியது.
இன்னொரு பக்கம் இந்த படத்தை முடித்த பின்னர் தெலுங்கில் தான் நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க வேண்டும் என ராம்சரண் விரும்புகிறார் என்றும் அதன் காரணமாகத்தான் இந்த சந்திப்பு என்றும் இன்னொரு யூகம் சொல்லப்படுகிறது.