பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
மலையாளத்தில் வெளிவந்த 'மணிசித்ரதாழ்' படம், இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் 2005ம் ஆண்டு ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் 'சந்திரமுகி'யாக வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது. வசூலையும் குவித்தது. தமிழ் சினிமாவில் அதிக நாட்கள் ஓடிய படம் என்ற சாதனையையும் படைத்தது. இதன் இரண்டாம் பாகத்தை இயக்க விரும்பிய பி.வாசு அதில் மீண்டும் ரஜினியை நடிக்க வைக்க முயற்சித்தார், அவர் மறுத்து விட்டார். ஜோதிகாவும் நடிக்க மறுத்து விட்டார்.
இதனையடுத்து ரஜினி நடிக்க வேண்டிய கேரக்டரில் ராகவா லாரன்சும், ஜோதிகா நடிக்க வேண்டிய கேரக்டரில் கங்கனா ரணாவத்தும் நடிக்க, தற்போது இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்த வடிவேலு நடித்திருக்கிறார். ராதிகா புதிதாக இணைந்துள்ளார்.
தற்போது படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டதாக தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது. இது தொடர்பான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள லைகா நிறுவனம், “சந்திரமுகி 2' படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விட்டது. இந்தப் படத்தை ரசிகர்கள் பெரிய திரையில் பார்ப்பதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளனர்.