''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
லால், நெடுமுடி வேணு, மனோஜ் கே.ஜெயன், திலகன், சுரேஷ் கோபி, கலாபவன் மணி, ராஜன் பி.தேவ் உள்ளிட்ட பல மலையாள நடிகர்கள் தமிழ் சினிமாவில் வில்லனாகவும், குணசித்தர வேடங்களிலும் நடித்தனர். அந்த வரிசையில் தற்போது வருகிறார் ஜெய்ஸி ஜோஸ்.
2013ம் ஆண்டு வெளியான 'திரி டாட்ஸ்' படத்தின் மூலம் மலையாள திரையுலகில் நடிகராக அறிமுகமான ஜெய்ஸி ஜோஸ், தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து மலையாள சினிமாவின் முக்கியமான நடிகராக உயர்ந்தார். லூசிபர், காபா, நாயட்டு, ஆபரேஷன் ஜாவா உள்ளிட்ட சுமார் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற '2018', 'கொரோனா பேப்பர்ஸ்' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது சுந்தர்.சி நடிப்பில், வி.இசட்.துரை இயக்கத்தில் நாளை(ஜூன் 23) வெளியாக உள்ள 'தலைநகரம் 2' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். சென்னையை மையப்படுத்தி கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள படம். இதில் அவர் சுந்தர்.சிக்கு வில்லனாக நடித்துள்ளார். அதிலும் 3 கெட்அப்களில் நடித்திருக்கிறார். இதை தொடர்ந்து சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கும் 'ரெபல்' படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.