டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

கன்னட மொழியில் வெளியான காந்தாரா திரைப்படம் இந்தியா முழுக்க வரவேற்பை பெற்றுள்ளது. கலை, அரசியலை சேர்ந்த பலரும் படத்தை பாராட்டி வருகிறார்கள். அந்த வரிசையில் ரஜினிகாந்தும் மனம் திறந்து பாராட்டினார். படத்தை பார்த்துவிட்டு, "தெரிந்தவர்களை விட தெரியாதவர்கள் அதிகம். ஹோம்பேல் பிலிம்ஸை விட யாராலும் இதை சிறப்பாக சொல்ல முடியாது. காந்தாரா என் மனதை நெகிழ வைத்தது. எழுத்தாளர், இயக்குநர் மற்றும் நடிகரான ரிஷப் ஷெட்டிக்கு வாழ்த்துக்கள். இந்த தலைசிறந்த படைப்பில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் குழுவினர் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். இது இந்திய சினமாவின் மாஸ்டர்பீஸ்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி, "அன்புள்ள ரஜினிகாந்த் சார், நீங்கள் இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார். நான் சிறுவயதில் இருந்தே உங்கள் ரசிகன். உங்களின் பாராட்டால் என் கனவு நனவானது. இது போன்ற உள்ளூர் கதைகளை செய்ய நீங்கள் என்னை ஊக்கப்படுத்தியுள்ளீர்கள். நன்றி சார்" என்று தனது டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் ரிஷப் ஷெட்டியை தனது வீட்டிற்கு அழைத்து பாராட்டினார். படம் பற்றிய அவரது ஆச்சர்யங்களை ரிஷப் ஷெட்டியுடன் பகிர்ந்து கொண்டார். அவருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டினார். ரிஷப் ஷெட்டியும் ரஜினியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுச் சென்றார்.




