தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' | 'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி | பிளாஷ்பேக்: ஒரிஜினலை வெல்ல முடியாத ரீமேக் | பிளாஷ்பேக்: சிவாஜிக்கு ஜோடியாக நடித்த அக்கா, தங்கை | இது மட்டும் நடந்தால் பிசாசு 2 படத்தை நானே ரிலீஸ் செய்வேன் : ஆண்ட்ரியா | கோவா சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது : பாலகிருஷ்ணாவுக்கு கவுரவம் | ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! |

மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்களில் நடித்த பின் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அதன் பின் விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தில் கதாநாயகியாக நடித்தார். தனுஷ் ஜோடியாக ஓடிடி தளத்தில் வெளியான 'மாறன்' படத்திலும் நடித்திருந்தார்.
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்திருப்பவர் மாளவிகா. ஆனாலும், அவருக்கு அதற்குப் பிறகு சரியான வாய்ப்புகள் வராமல் இருந்தது. இப்போது இரண்டு முக்கிய படங்களில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதில் ஒன்று தமிழ், மற்றொன்று தெலுங்கு.
பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் 'தங்கலான்' படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவர் மாளவிகா. மற்றொரு கதாநாயகியாக பார்வதி நடிக்கிறார். தெலுங்கில் மாருதி இயக்த்தில் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவர் மாளவிகா. மற்றொரு கதாநாயகியாக நிதி அகர்வால் நடிக்கிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு எந்தவித அறிவிப்பும் இன்றி கடந்த பத்து நாட்களாக நடந்து வருவதாகத் தகவல். தமிழ், தெலுங்கில் இரண்டு முக்கிய படங்களில் நடிப்பதன் மூலம் அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிக்க உள்ளார் மாளவிகா மோகனன்.




