‛ஜமா' இயக்குனரின் அடுத்த பட தலைப்பு ‛அன்பே டயானா' | எழுத்தாளரை மணந்தார் பாடகர் வேடன் | மீண்டும் நடிக்க வரும் ரம்பா | பிரியங்கா சோப்ராவின் தி பிளப் ஓடிடியில் வெளியானது | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி | மார்ச் 6ல் ‛ஓ பட்டர்பிளை' ரிலீஸ் | ஜி.வி.பிரகாஷின் புதிய படங்கள் குறித்து தகவல் இதோ | பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர் | ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி |

தெலுங்கில் வளர்ந்து வரும் இளம் நடிகர் அகில் அக்கினினேனி. நாகார்ஜூனா, அமலா தம்பதிகளின் மகன். தற்போது இவர் அதிக பட்ஜெட்டில் தயாராகி வரும் ஏஜெண்ட் படத்தில் நடிக்கிறார். இதில் அவர் இந்திய ராணுவ உளவாளியாக நடிக்கிறார். இதற்காக சிக்ஸ் பேக் வைத்து நடித்து வருகிறார். இந்த படத்தில் மம்முட்டி முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். அவர் சீனியர் ஏஜெண்டாக நடிக்கிறார் என்றும், எதிரிநாட்டு ஏஜெண்டாக அதாவது வில்லனாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தில் அகிலின் காதலியாக சாக்ஷி வைத்யா நடித்துள்ளார். ரசூல் எல்லோர், ஒளிப்பதிவு செய்ய, ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கிறார். இப்படத்திற்கு கதை வசனத்தை வக்கந்தம் வம்சி எழுதியுள்ளார். ஏ.கே. எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் சுரேந்தர் 2 சினிமாவின் சார்பில் ராமபிரம்மம் சுங்கரா இப்படத்தை தயாரிக்கிறார். தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது.