ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
ஹிந்தியில் வெளியான 'தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்' என்கிற படத்தை இயக்கி, தேசிய விருது பெற்றவர் ஓம் ராவத். இவரது இயக்கத்தில் தயாராகி, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி அன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் 'ஆதி புருஷ்' டி - சீரிஸ், ரெட்ரோபைல்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம், ஐமேக்ஸ், 3டி முறையில் உருவாகி உள்ளது.
இப்படத்தின் டீசரை படக்குழு அயோத்தியில் வெளியிட்டது. 'ஆதி புருஷ்' படத்தின் டீசரில் உள்ள கிராபிக்ஸ் காட்சிகள் வீடியோ கேம் போலவும், கார்ட்டூன் சேனலில் வரும் தொடர் போன்று இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. படத்தில் ராவணனாக நடித்திருக்கும் சைப் அலிகான் கதாபாத்திரம் குறித்தும் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
அதோடு சாந்தமான தோற்றம் கொண்ட ராமர் உருவத்தை கோப முகத்துடன் வெளியிட்டிருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த தவறுகளை திருத்தும் முயற்சியில் தற்போது தயாரிப்பு தரப்பு இறங்கி உள்ளது. இந்த நிலையில் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ராமர் தோற்றத்தில் இருக்கும் பிரபாஸ் சாந்தமாக இருப்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.
“ராமாயண காவியத்தில் நாயகனான ராமபிரானின் அனைத்து குணங்களின் குறைபாடற்ற கலவையாக இருக்கும் பிரத்யேக போஸ்டரை வெளியிடுகிறோம்” என்று தயாரிப்பு தரப்பு குறிப்பிட்டுள்ளது. நடிகர் பிரபாஸின் ராம அவதார உருவப்படம், தெய்வீகம் ததும்பும் வகையில் அமைந்திருப்பதால் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் இணையத்தில் வைரலாகி வருகிறது.