பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு | நவம்பர் 28ல் ரீ-ரிலீஸ் ஆகும் ‛அஞ்சான்' |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் வெளியான உப்பென்னா என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து, முதல் படத்திலேயே லைம்லைட்டுக்கு வந்தவர் நடிகை கிர்த்தி ஷெட்டி. அதைத்தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவரும் கிர்த்தி ஷெட்டி தமிழில் சூர்யா, தனுஷ் ஆகியோருடனும் ஜோடியாக நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து தற்போது அஜயண்டே ரந்தம் மோசனம் என்கிற படம் மூலமாக மலையாளத் திரையுலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார் கிர்த்தி ஷெட்டி. இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள இளம் முன்னணி நடிகர் டொவினோ தாமஸ் நடிக்கிறார். ஜித்தின் லால் இயக்குகிறார்.
இந்தப்படத்தின் பூஜை காரைக்குடியில் உள்ள ஒரு கோவில் மண்டபத்தில் எளிமையாக நடைபெற்றதுடன் அப்படியே படப்பிடிப்பும துவங்கியுள்ளது. இந்தப்படத்தின் கதை 1900, 1950 மற்றும் 1990 என மூன்று விதமான காலகட்டங்களில் நிகழ்வதால் மூன்று விதமான தோற்றங்களில் நடிகர் டொவினோ தாமஸ் நடிக்க உள்ளார். அதற்கு ஏற்ற மாதிரி கிர்த்தி ஷெட்டி தவிர ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மலையாளத்தில் தேசியவிருது பெற்ற நடிகை சுரபி லட்சுமி ஆகியோரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் நடிகை ரோகிணி, ஹரிஷ் பெராடி ஆகியோரும் நடிக்கின்றனர்.