மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' | 'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி | பிளாஷ்பேக்: ஒரிஜினலை வெல்ல முடியாத ரீமேக் | பிளாஷ்பேக்: சிவாஜிக்கு ஜோடியாக நடித்த அக்கா, தங்கை | இது மட்டும் நடந்தால் பிசாசு 2 படத்தை நானே ரிலீஸ் செய்வேன் : ஆண்ட்ரியா | கோவா சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது : பாலகிருஷ்ணாவுக்கு கவுரவம் | ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! |

ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரமான இந்த வாரத்தில் நிறைய படங்கள் வெளிவர உள்ளன. நாளை ஆகஸ்ட் 4ம் தேதி ஜெய் நடித்துள்ள 'எண்ணித் துணிக', படம் வெளியாக உள்ளது. ஆகஸ்ட் 5ம் தேதி பிரபுதேவா நடித்துள்ள 'பொய்க்கால் குதிரை', பரத் நடித்துள்ள 'லாஸ்ட் 6 ஹவர்ஸ்', அதர்வா நடித்துள்ள 'குருதி ஆட்டம்', வைபவ் நடித்துள்ள 'காட்டேரி', விஜய் வசந்த் நடித்துள்ள 'மை டியர் லிசா', ஷீலா ராஜ்குமார் நடித்துள்ள 'மாயத்திரை', மற்றும் மகேஷ் நடித்துளள 'வட்டகரா' உள்ளிட்ட படங்கள் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றோடு டப்பிங் படமான துல்கர் சல்மான் நடித்துள்ள 'சீதா ராமம்' படமும், பிராட் பிட் நடித்த ஹாலிவுட் படமான புல்லட் டிரெயின் படமும் (ஆக.,4ல்) வெளிவர உள்ளது.
ஒரே வாரத்தில் இத்தனை படங்கள் வெளிவருவது ஆச்சரியம்தான். 'விக்ரம்' படத்திற்குப் பிறகு வெளிவந்த படங்கள் வியாபார ரீதியாக பெரிய வரவேற்பைப் பெறாத நிலையில் நாளை வெளியாக உள்ள இந்த மீடியம் பட்ஜெட் படங்கள் எப்படிப்பட்ட வரவேற்பைப் பெறும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.




