சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் | இந்த வாரம் அப்பா, மகள் ; குரு, சிஷ்யன் படங்கள் மோதல் | லவ் மேரேஜ் படம் ஹிட்டா? : கணக்கு சொல்லாத படக்குழு | '96' இரண்டாம் பாகம் : விலக முடிவெடுத்த விஜய் சேதுபதி? | அபார்ட்மென்ட் வாங்கத் தவிக்கும் '3 பிஹெச்கே', அதைவிட்டு போகச் சொல்லும் 'பறந்து போ'!! | டியூட் படத்தின் டிஜிட்டல் உரிமை இத்தனை கோடியா? |
வெற்றிச்செல்வன் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள புதிய திரைப்படம் 'எண்ணித்துணிக'. ஜெய்க்கு ஜோடியாக அதுல்யா நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் வம்சி கிருஷ்ணா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் அஞ்சலி நாயர், 'சீதக்காதி' பட புகழ் சுனில் ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசைஅமைத்துள்ளார். சஸ்பென்ஸ் கலந்த ஆக் ஷன் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகவுள்ளது. சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 4ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.