ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
தெலுங்கு, தமிழ், ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிஸியான நடிகையாக இருப்பவர் கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா. தற்போது விஜய்யுடன் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். ஹிந்தியிலும் சில படங்களில் நடித்து வருகிறார்.
ராஷ்மிகாவுக்கும், விஜய் தேவரகொண்டாவுக்கும் காதல் என அடிக்கடி கிசுகிசு வந்து கொண்டிருக்கிறது. அதை இருவரும் அவ்வப்போது மறுத்தும் வந்தார்கள். சமீபத்திய பேட்டி ஒன்றில் இருவருமே அது பற்றி தனித்தனியாக தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்கள்.
காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் தேவரகொண்டா, “அவர் எனது டார்லிங், ஆனால், நாங்கள் இருவரும் டேட்டிங் செய்யவில்லை,” என்றும் மற்றொரு பேட்டியில் பேசிய ராஷ்மிகா, “நான் சிங்கிள்தான். யாருடனும் எந்த உறவிலும் இல்லை,” என பதிலளித்துள்ளார்.
தெலுங்குத் திரையுலகத்தில் சமீபத்திய சினிமா ஜோடிகளில் பலரையும் கவர்ந்த ஜோடியாக விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஜோடி இருந்தது. அதனால்தான் அவர்களைப் பற்றி அடிக்கடி கிசுகிசுக்கள் வெளிவருகிறது.