இதுதான் மெகா கூட்டணி : 32 ஆண்டுளுக்கு பின் இணைந்து நடிக்கும் ரஜினி, அமிதாப்? | விஜய் தேவரகொண்டா மீது குற்றச்சாட்டிய பிரபல நடிகை | கடினமான சோதனை : கஜோல் எடுத்த முடிவு | மீண்டும் இணைந்த டைரி பட கூட்டணி | மாவீரன் படத்தை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட் நிறுவனம் | ‛வேட்டையாடு விளையாடு' ரீ ரிலீஸ் அப்டேட் | தமன்னாவுக்கு ரஜினி கொடுத்த பரிசு | ஜனாதிபதியை சந்தித்த சமந்தா | ராமர் வேடத்தில் நடித்த பிரபாஸுக்கு நன்றி தெரிவித்த ராகவா லாரன்ஸ் | வட சென்னை 2 : சந்தோஷ் நாராயணன் கொடுத்த அப்டேட் |
கொம்பன் படத்திற்கு பிறகு முத்தையா இயக்கத்தில் மீண்டும் கார்த்தி நடித்துள்ள படம் 'விருமன்'. இப்படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ், சூரி, ராஜ்கிரண், கருணாஸ், மனோஜ் பாரதிராஜா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா தயாரிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த படத்தின் முதல் பாடலான 'கஞ்ச பூவு கண்ணால' பாடல் வெளியாகி ஹிட்டானது. இந்நிலையில் இந்த படத்தின் பிரமாண்ட இசைவெளியீட்டு விழா மதுரையில் இன்று நடைபெறுகிறது . இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ஷங்கர், நடிகர் சூர்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள இருக்கிறார்கள். விமான நிலையம் வந்த சூர்யா, கார்த்திக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தனர்.