Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரமாண்டமாக உருவாகும் நயன்தாராவின் 75வது படம்

12 ஜூலை, 2022 - 01:38 IST
எழுத்தின் அளவு:
Nayanthara's-75th-film-is-going-to-be-huge

நடிகை நயன்தாரா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் ஓடிடி.,யில் வெளியான 'ஓ2' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஹிந்தியில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே இயக்குனர் விக்னேஷ் சிவனை, அண்மையில் திருமணம் செய்துக் கொண்ட நயன்தாரா, தற்போது சினிமாவில் மீண்டும் நடிக்க அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் நயன்தாரா நடிக்கும் 75வது படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தை ட்ரைடண்ட் ஆர்ட் நிறுவனம் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரிக்கிறார். இப்படத்தை நீலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர்கள் ஜெய் மற்றும் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சினிமா தான் என் உயிர் :விக்ரம் உருக்கம்சினிமா தான் என் உயிர் :விக்ரம் ... அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் உதயநிதி! அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)