எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை |
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஹிந்தியில் வெளியான 'ஆர்டிகிள் 15' படத்தின் தமிழ் ரீமேக் தான் நெஞ்சுக்கு நீதி. நெஞ்சுக்கு நீதி படம் திரையரங்குகளில் வெளியாகி சமீபத்தில் இந்தப் படத்தின் 50வது நாள் வெற்றி விழாவை படக்குழுவினர் கேக் கொண்டாடினர். அப்போது அருண் ராஜா காமராஜ் உடன் மீண்டும் கூட்டணி அமைக்க இருப்பதாக உதயநிதி தெரிவித்துள்ளார்.
உதயநிதி தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'மாமன்னன்' படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படம் தான் உதயநிதியின் கடைசி படம் என்று கூறப்பட்டது. ஆனால் நல்ல கதைக்களம் உள்ள படங்கள் இருந்தால் மீண்டும் நடிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.