ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள படம் மழை பிடிக்காத மனிதன். இந்த படத்தில் நடிகர் சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்கள் தவிர இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் பிருத்வி அம்பார் நடித்துள்ளார். இவர் படம் முழுவதும் விஜய் ஆண்டனியுடன் இணைந்து பயணிக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் ஆண்டனியின் கதாபாத்திரம் படத்தில் பேசும் வசனங்கள் வெறும் இரண்டு பக்கத்தில் அடங்கிவிடும் என்று கூறியுள்ள விஜய் மில்டன் அவருக்கும் சேர்த்து படத்தில் வளவள என பேசும் கதாபாத்திரத்தில் பிருத்வி அம்பார் நடித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
மேலும் தனது கதாபாத்திரத்திற்கு தானே தமிழில் டப்பிங் பேச பிருத்வி அம்பார் முயற்சித்தாராம். ஆனால் அது சரியாக அமையவில்லை என்பதால் அவருக்கு பதிலாக நடிகர் நகுலை அழைத்து அந்த கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேச வைத்துள்ளார் விஜய் மில்டன். இதில் ஆச்சரியம் என்னவென்றால் முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நகுலை தான் தனது மனதில் நினைத்து வைத்திருந்தேன் என்று கூறியுள்ளார் விஜய் மில்டன்.




