ஒரே நாளில் மோதும் செல்வராகவன் - தனுஷ் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் | குஷ்புவின் காலில் ஏற்பட்ட திடீர் காயம் | சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் |
நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள படம் கடுவா. ஆக்சன் படங்களை இயக்குவதில் பெயர் பெற்ற இயக்குனர் ஷாஜி கைலாஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் வில்லனாக விவேக் ஓபராய் நடித்துள்ளார். தன் ஏரியாவில் டான் ஆக விளங்கும் பிரித்விராஜுக்கும் அசிஸ்டன்ட் போலீஸ் கமிஷனரான விவேக் ஓபராய்க்கும் இடையே நடக்கும் பிரச்னை தான் இந்த படத்தின் கதை.
சொல்லப்போனால் இந்த இருவருக்கும் எந்த பிரச்னையும் இல்லாத நிலையில் பிரித்விராஜ், விவேக் ஓபராயின் தாயிடம் சொன்ன ஒரு வார்த்தை காரணமாக பெரிதாகும் ஒரு பிரச்னை இவர்கள் இருவருக்கும் நீயா நானா பார்த்துவிடலாம் என்கிற ஈகோ மோதலை உருவாக்குகிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் கதை. இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றியும் பெற்றுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வெளியான டிரைவிங் லைசன்ஸ் மற்றும் அய்யப்பனும் கோஷியும் ஆகிய படங்களும் பிரித்விராஜ் நடிப்பில் ஈகோ யுத்தத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்கள் தான். அந்த வகையில் ஈகோ யுத்த கதைகள் பிரித்விராஜூக்கு தொடர்ந்து வெற்றி தருகின்றன என்பது ஆச்சரியமான விஷயம் தான்.