ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
ரசிகர்களால் பெரிதும் விரும்பி படிக்கப்பட்ட வரலாற்று நாவல் பொன்னியின் செல்வன். அமரர் கல்கி எழுதிய இந்த நாவலை படமாக்கும் முயற்சி கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக அவ்வப்போது நடைபெற்றது. ஆனாலும் இத்தனை வருடங்களுக்கு பிறகு இயக்குனர் மணிரத்னம் மூலமாக அந்த நாவலுக்கு திரை வடிவம் கிடைத்துள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் மணிரத்தினம் பேசும்போது, நானே கடந்த 30 வருடங்களில் மூன்று முறை இந்த படத்தை படமாக்க முயற்சி செய்து இப்போதுதான் அதை சாதித்துள்ளேன். இதற்கு முன்னதாக நடிகர் எம்.ஜி.ஆர் இந்த படத்தை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். அப்போதே அவர் உருவாக்கி இருந்திருக்க வேண்டும். ஆனால் அதிர்ஷ்டவசமாக அதை நாங்கள் உருவாக்க வேண்டும் என்பதற்காக விட்டு வைத்து விட்டார் என்று சொல்ல வேண்டும் என்று கூறினார்.
அது மட்டுமல்ல எம்ஜிஆர் பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்க வேண்டும் என்று தான் இதுவரை செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் அவர் இந்த படத்தில் எந்த கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பினார் என்கிற தகவல் பற்றி பெரிய அளவில் யாருக்கும் தெரியவில்லை. இந்த நிலையில் மணிரத்னம் கூறும்போது, எம்ஜிஆர் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பியதாக ஒரு தகவலை கூறியுள்ளார். தற்போது மணிரத்னம் உருவாக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்துள்ளார். அந்தவகையில் எம்ஜிஆர் நடிக்க விரும்பிய, அவரால் நடிக்க இயலாமல் போன ஒரு கதாபாத்திரம் தற்போது கார்த்திக்கு கிடைத்துள்ளது மிகப்பெரிய பாக்கியம் என்றே சொல்ல வேண்டும்.