Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொன்னியின் செல்வன் - இரண்டு பூரண சந்திரர்கள், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா

10 ஜூலை, 2022 - 16:56 IST
எழுத்தின் அளவு:
aishwarya-rai-and-trisha-characters-in-Ponniyin-Selvan

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் டீசர் இரு தினங்களுக்கு முன்பு வெளிவந்தது. கல்கி எழுதிய நாவலைப் படித்தவர்கள், படிக்காதவர்கள் எனப் பலரும் டீசரைப் பார்த்து வியந்து பாராட்டி வருகிறார்கள். படத்தைப் பார்ப்பதற்கு முன்பு நாவலைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கடந்த சில நாட்களில் பலரும் 'பொன்னியின் செல்வன்' நாவலின் தமிழ் மற்றும் ஆங்கிலப் பதிப்புகளை அதிகம் வாங்கி வருவதாக பதிப்பக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

'பொன்னியின் செல்வன்' நாவலில் இரண்டு முக்கியப் பெண் கதாபாத்திரங்கள் நந்தினி மற்றும் குந்தவை. அவர்கள் இருவரின் அழகைப் பற்றி பல்வேறு இடங்களில் கல்கி அவ்வளவு ரசனையாக எழுதியிருப்பார். நாவலைப் படிக்கும் போது ஒவ்வொருவருக்கும் அந்த முகங்கள் ஒரு விதமான கற்பனை உருவத்தில் மனதிற்குள் தோன்றி இருக்கும்.

'பொன்னியின் செல்வன்' படத்தில் அந்த இரு கதாபாத்திரங்களில் யாரை நடிக்க வைக்கப் போகிறார் மணிரத்னம் என்ற எதிர்பார்ப்பு பட அறிவிப்பு வந்த போதே எழுந்தது. நந்தினி ஆக 1994ல் உலக அழகிப் பட்டம் வென்ற நடிகை ஐஸ்வர்யா ராயும், குந்தவை ஆக 1999ல் மிஸ் சென்னை அழகிப் பட்டம் வென்ற நடிகை த்ரிஷாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். ஐஸ்வர்யா ராய் பற்றி நாவல் ரசிகர்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், குந்தவை கதாபாத்திரத்தில் த்ரிஷா பொருத்தமாக இருப்பாரா என்று பலர் சந்தேகப்பட்டார்கள். அப்படி சந்தேகப்பட்டவர்களை இப்போது ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் த்ரிஷா.

நாவலில் நந்தினி, குந்தவை இருவரும் சந்திக்கும் 'அத்தியாயம் 14 - இரண்டு பூரண சந்திரர்கள்' தலைப்பில் கல்கி அவ்வளவு வர்ணனைகளுடன் எழுதியிருப்பார். அந்த வர்ணனைக்கு ஏற்றபடி படத்தில் காட்சி அமைந்திருக்கிறது என்பது படத்தின் டீசரிலேயே தெரிகிறது.

ஐஸ்வர்யாவும், த்ரிஷாவும் தோன்றும் அந்த ஒரு காட்சியில் இருவருமே பேரழகிகளாக இருக்கிறார்கள் என ரசிகர்கள் பலரும் குறிப்பிட்டு வருகிறார்கள். அதற்குக் காரணமான ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், மேக்கப் கலைஞர்கள், ஆடை அலங்காரக் கலைஞர்கள் ஆகியோரைப் பாராட்டியே ஆக வேண்டும்.

நாவலில் கல்கி எழுதிய வர்ணனை கீழே உள்ளது. அதைப் படித்து விட்டு மீண்டும் டீசரைப் போய்ப் பாருங்கள்.
“குந்தவை யானையிலிருந்தும் நந்தினி பல்லக்கிலிருந்தும் இறங்கினார்கள். நந்தினி விரைந்து முன்னால் சென்று குந்தவைக்கு முகமன் கூறி வரவேற்றாள். அந்த வரவேற்பைக் குந்தவை புன்னகை புரிந்து அங்கீகரித்தாள்.

சோழ நாட்டின் அந்த இரு பேரழகிகளையும் அங்கு ஒருங்கே கண்ட ஜனத்திரளின் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. நந்தினி பொன் வர்ணமேனியாள். குந்தவை செந்தாமரை நிறத்தினாள். நந்தினியின் பொன்முகம் பூரணசந்திரனைப்போல் வட்ட வடிவமாயிருந்தது. குந்தவையின் திருமுகம் கைதேர்ந்த சிற்பிகள் வார்த்த சிலை வடிவத்தைப் போல் சிறிது நீள வாட்டமாயிருந்தது. நந்தினியின் செவ்வரியோடிய கருநிறக் கண்கள் இறகு விரித்த தேன் வண்டுகளைப்போல் அகன்று இருந்தன.

குந்தவையின் கருநீல வர்ணக் கண்கள் நீலோத்பலத்தின் இதழைப்போல் காதளவு நீண்டு பொலிந்தன. நந்தினியின் மூக்கு தட்டையாக வழுவழுவென்று தந்தத்தினால் செய்ததுபோல் திகழ்ந்தது. குந்தவையின் மூக்கு சிறிது நீண்டு பன்னீர்ப்பூவின் மொட்டைப்போல் இருந்தது. நந்தினியின் சிறிது தடித்த இதழ்கள் அமுதம் ததும்பும் பவழச் செப்பைப் போல் தோன்றியது. குந்தவையின் மெல்லிய இதழ்களோ தேன் பிலிற்றும் மாதுளை மொட்டெனத் திகழ்ந்தது.

நந்தினி தன் கூந்தலைக் கொண்டை போட்டு மலர்ச்செண்டுகளைப் போல் அலங்கரித்து இருந்தாள். குந்தவையின் கூந்தலோ "இவள் அழகின் அரசி" என்பதற்கு அடையாளமாகச் சூட்டிய மணி மகுடத்தைப்போல் அமைந்திருந்தது.

இப்படியெல்லாம் அந்த இரு வனிதா மணிகளின் அழகையும் அலங்காரத்தையும் தனித்தனியே பிரித்து ஒப்பிட்டுப் பார்த்து எல்லோரும் மகிழ்ந்தார்கள் என்று சொல்ல முடியாது தான். ஆயினும் பொதுப்படையாக இருவரும் நிகரில்லாச் சவுந்தரியவதிகள் என்பதையும், அங்க அமைப்பிலும் அலங்காரத்திலும் மாறுபட்டவர்கள் என்பதையும் அனைவருமே எளிதில் உணர்ந்தார்கள்.

நந்தினியின் பேரில் அதுவரையில் நகர மாந்தர்களுக்கு ஓரளவு அதிருப்தியும் அசூயையும் இருந்து வந்தன. குந்தவைப் பிராட்டியை ஒவ்வொருவரும் தங்கள் குல தெய்வமெனப் பக்தியுடன் பாராட்டினார்கள். ஆனால், இப்போது பழுவூர் இளைய ராணி கோட்டை வாசலுக்கு வந்து இளைய பிராட்டியை வரவேற்றது மக்களுக்கு மிகுந்த குதூகலத்தை விளைவித்தது.
மக்கள் இவ்விதம் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கையில் நந்தினிக்கும், குந்தவைக்கும் நடந்த சம்பாஷணை, மின்னலை மின்னல் வெட்டும் தோரணையில் அமைந்தது.“

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய கதாபாத்திரத்தில் கார்த்திஎம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய ... வந்தாரை வாழவைக்கும் தமிழகம்; வந்தாரை ஆள வைக்கும் தமிழகம்: இயக்குநர் பேரரசு பேச்சு வந்தாரை வாழவைக்கும் தமிழகம்; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

11 ஜூலை, 2022 - 13:57 Report Abuse
ராமகிருஷ்ணன் பொன்னியின் செல்வன் பலமுறை படித்துள்ளேன் கல்கியின் வர்ணனைகள் பல இடங்களில் மிக பிரம்மாதமாய் இருக்கும். அது படிப்பவர்கள் தத்தமக்கு ஏற்றபடி கற்பனை செய்து வைத்திருப்பார்கள். நூலில் கடைசில கதையை எழுத உதவிய ஆதாரங்கள் பற்றி சொல்லியிருக்கிறார். அதில் முக்கியமானது, தாமிர உலோக தகடுகளில் அக்காலத்தில் எழுதப்பட்ட சோழர்களின் செப்பேடுகள் இன்றும் நீங்கள் பார்க்கலாம். ஆனால் அந்த தமிழ் நமக்கு புரிவது கஷ்டம். உண்மையில் நடந்த வரலாற்றினை, கோடிக்கணக்கானவர்களின் கற்பனையை எதிர்பார்ப்புகளை திரைப்படம் 😔 திருப்திபடுத்துமா? கஷ்டம் தான். ஆனால் முயற்சிக்கு பாராட்டுகள்.
Rate this:
Viswam - Mumbai,இந்தியா
11 ஜூலை, 2022 - 13:44 Report Abuse
Viswam கதையை சொதப்பாம எடுத்தால் கல்கி ஆன்மா சாந்தி அடையும்.
Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
11 ஜூலை, 2022 - 07:20 Report Abuse
Kasimani Baskaran சிக்குலர் சோழ மன்னர்கள் சோள மன்னர்களாகவே பார்க்கப் படுவார்கள்... இன்னும் சொல்லப்போனால் சிகப்பு அரக்கன் பணச்சலவை செய்ய வசதியான படம் என்றுதான் சொல்லப் படுகிறது...
Rate this:
chakra - plano,யூ.எஸ்.ஏ
11 ஜூலை, 2022 - 03:56 Report Abuse
chakra கிழவிகளை போட்டால் படம் பபடம்தான்
Rate this:
ஆக .. - Chennai ,இந்தியா
11 ஜூலை, 2022 - 09:09Report Abuse
ஆக ..ரெண்டுமே நிறைய பேருக்கு பிடிக்கும்...
Rate this:
Manian - Chennai,ஈரான்
11 ஜூலை, 2022 - 03:00 Report Abuse
Manian குந்தவை முக அழகு.. அதுக்கு நம்ம திரிசாவை விட சேரநாடு சேட்டி கீர்த்தி சுரேசு சிரிச்ச நீள மொகம் நல்லா இருக்குமே அட நம்ம சுகாசினியே போதுமே அந்தக்காலத்திலே குந்தவையை பாத்தவனுக வந்து இல்லைம்பானா?
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
தொடர்புடைய வீடியோக்கள்

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in