20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' | 'காந்தாரா' வழக்கு ரத்து செய்ய ரன்வீர் சிங் மனு | சென்னையில் மீண்டும் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தும் இளையராஜா | 'கல்கி 2' படப்பிடிப்பு அப்டேட் தந்த அமிதாப் பச்சன் | பிளாஷ்பேக் : டப்பிங் கலைஞர் பாரதிராஜா | பிளாஷ்பேக் : தமிழ் படத்தை தணிக்கை செய்த ஜவஹர்லால் நேரு |

விராட பர்வம் படத்தில் நடித்து முடித்துள்ள சாய் பல்லவி அடுத்து, கார்கி, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படமென நடித்து வருகிறார். இந்த நிலையில் விராட பர்வம் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சாய்பல்லவி பேசிய வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அவர் கூறுகையில், ‛‛வன்முறை எனக்கு பிடிக்காது. வன்முறை மூலம் சாதிக்க முடியும் என நம்பவில்லை. முடிந்தவரை யாரையும் காயப்படுதாமல் இருக்க வேண்டும். சமீபத்தில் வெளியான தி காஷ்மீர் பைல்ஸ் படத்தில் காஷ்மீர் பண்டிட்கள் எப்படி கொல்லப்பட்டார்கள் என்பதைக் காட்டுகிறது. அதை மத மோதல்களாக பார்க்கிறோம். சமீபத்தில் மாடுகளை கொன்று ஒரு வண்டியில் ஏற்றிச் செல்லப்பட்டது, அதன் டிரைவர் முஸ்லிம் என்பதற்காக அவரை அடித்து, கொன்று ஜெய் ஸ்ரீராம் கோஷங்களை எழுப்பினர். இந்த இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இடது சாரி அல்லது வலதுசாரி என யாராக இருந்தாலும் பிறரை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும். மதங்களைக் கடந்து மனிதர்களாக இருக்க வேண்டும்'' என்றார்.
சாய் பல்லவியின் இந்த கருத்து வைரலாகி வருதுடன் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.