ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் தயாரித்து, நடித்த விக்ரம் படம் கடந்த 3ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. தற்போது 300 கோடி வசூல் சாதனையை கடந்து போய்க் கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு ஒரு கார் பரிசளித்தார் கமல். அதையடுத்து உதவி இயக்குனர்களுக்கு பைக், சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்தார். இதனால் விக்ரம் படத்தில் நடித்த விஜய்சேதுபதி, பகத் பாசில் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு கமல்ஹாசன் என்ன பரிசு கொடுக்கப் போகிறார்? என்று எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் கேரளாவிற்கு தியேட்டர் விசிட் சென்றிருந்த அனிருத்திடம் கமல்ஹாசன் உங்களுக்கு என்ன பரிசு கொடுக்க போகிறார் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதற்கு சற்றும் யோசிக்காமல், கமல் சார் எனக்கு விக்ரம் படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கொடுத்ததே மிகப்பெரிய பரிசு தான் என்று பதிலை கொடுத்து அனைவரையும் அசர விட்டுள்ளார் அனிருத் .