கமல் சாரை பற்றி தப்பா பேசாதீங்க! - சர்ச்சை குறித்து ஆவேசமாக பேசிய சிவராஜ்குமார் | கார்த்தியின் 'கைதி- 2' படப்பிடிப்பு: டிசம்பர் மாதத்தில் தொடங்குகிறது! | அபிஷன் ஜீவிந்த் மூலம் எனக்கு கிடைத்த புகழ்! - சசிகுமார் நெகிழ்ச்சி | சூர்யா 45வது படம் பண்டிகை நாளில் வெளியாகும்! - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தகவல் | பெங்களூரு காவல் நிலையத்தில் கமல்ஹாசன் மீது புகார்! வழக்கை பதிவு செய்யாத போலீசார் | 'பாஸ் என்கிற பாஸ்கரன் 2' வருமா? | ஹீரோயினை விட ஒரு பாடலுக்கு ஆடும் ராஷ்மிகாவுக்கு அதிக சம்பளம் | நிதிஅகர்வாலுடன் நடித்தால் துணை முதல்வரா? | எப்போதான் முடியும் ரவிமோகன் - ஆர்த்தி சண்டை? | 'தக்லைப்' படத்தில் போலீசாக வருகிறாரா திரிஷா? |
ஏவிஎம் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், ரஜினிகாந்த், ஸ்ரேயா, சுமன், விவேக், மணிவண்ணன், வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்த படம் சிவாஜி. 2007ம் ஆண்டு ஜுன் மாதம் 15ம் தேதி இப்படம் வெளிவந்தது. இப்படம் வெளிவந்து இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்தப் படம் தான் தமிழ் சினிமாவை உலக அரங்கில் இன்னும் அதிகமாகப் பரவச் செய்தது. அமெரிக்காவில் ஒரு தமிழ்ப் படத்திற்கு முதன் முதலில் கிடைத்த அதிக வரவேற்பு இந்தப் படத்தில் இருந்துதான் ஆரம்பமானது.
ஒரு பக்கா கமர்ஷியல் படமாக உருவான இப்படத்தில் நடிப்பு, பிரம்மாண்டம், சென்டிமென்ட், சிறப்பான பாடல்கள் என அனைத்தும சிறப்பாக அமைந்து படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது. பாடல் காட்சிகளுக்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்கங்கள் அதில் ரஜினிகாந்த், ஸ்ரேயாவின் நடனம் ஆகியவை இன்றும் வசீகரமானவை.
இந்நிலையில் சிவாஜி படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆனதையொட்டி நடிகர் ரஜினியை அவரது இல்லத்தில் தனது மகள் அதிதி உடன் சென்று பார்த்துள்ளார் ஷங்கர். அதுபற்றி, ‛‛சிவாஜி படத்தில் ரஜினி உடன் இணைந்து பணி செய்தது மறக்க முடியாத அனுபவம். அவரது ஆற்றல், பாசம் அனைத்தும் எனது நாட்களை இனிமை ஆக்கியது'' என நெகிழ்ச்சி உடன் பதிவிட்டுள்ளார் ஷங்கர்.
அதேப்போன்று ரஜினி உடன் எடுத்த செல்பி போட்டோவை பகிர்ந்து தனது மகழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் ஷங்கர் மகள் அதிதி. தற்போது இவர் கார்த்தி உடன் விருமன் படத்தில் நாயகியாக நடித்து சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.