Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வெப் தொடரில் நடிக்கும் சண்முக பாண்டியன்

12 மே, 2022 - 01:53 IST
எழுத்தின் அளவு:
Shanmuga-Pandian-starring-in-the-web-series

விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். 2015ம் ஆண்டு சகாப்தம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் விஜயகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதன்பிறகு மதுர வீரன் என்ற படத்தில் நடித்தார் அந்தப் படமும் சண்முக பாண்டியனுக்கு கைகொடுக்கவில்லை. தற்போது மித்ரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் வெப் தொடர் ஒன்றில் நடிக்க இருக்கிறார். சசிகுமார் இயக்க இருக்கும் தொடரில் அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொடர் எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை என்ற நாவலைத் தழுவி உருவாகிறது. இதனை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தயாரிக்கிறார்.
இதற்கிடையில் குற்றப்பரம்பரை என்கிற பெயரில் இன்னொரு கதையை பாரதிராஜா வெப் தொடராக இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இயக்குனர் பாலா இப்படியான ஒரு முயற்சியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சிவகங்கை மாவட்டத்துக்கு ஆம்புலன்ஸ் வழங்கிய சிவகார்த்திகேயன்சிவகங்கை மாவட்டத்துக்கு ஆம்புலன்ஸ் ... ஓடிடியில் வெளியாகும் சேத்துமான் ஓடிடியில் வெளியாகும் சேத்துமான்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)