‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

சாரா கலைக்கூடம் நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ ராஜா இணைந்து தயாரித்துள்ள படம் 'ஆகக் கடவன'. புதுமுகம் ஆதிரன் சுரேஷ் கதை நாயகனாக நடித்துள்ளார். இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் வின்சென்ட், சி ஆர் ராகுல், மைக்கேல், ராஜசிவன், சதீஷ் ராமதாஸ், தட்சணா மற்றும் நிவாஸ் ஆகிய புதுமுகங்கள் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார் அரசு திரைப்படக் கல்லூரி மாணவரான தர்மா. லியோ வெ ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். சாந்தன் அன்பழகன் இசை அமைத்துள்ளார். இந்த படம் நாளை (23ம் தேதி) வெளியாகிறது. படம் பற்றி இயக்குனர் தர்மா கூறியதாவது: நெடுஞ்சாலையில், பஞ்சரான பைக்கோடு, தன் நண்பனுடன் காத்திருக்கும் ஹீரோவிற்கு, அடுத்தடுத்து அங்கு நடக்கும் சம்பவங்கள், அவன் வாழ்க்கையையே ஆபத்தில் கொண்டு சேர்க்கிறது. அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா என்பதை சஸ்பென்ஸ் த்ரில்லராக சொல்லும் படம்.
பெண் கதாபாத்திரங்களே இடம்பெறாத சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். முழுக்க முழுக்க ஆண் கதாபாத்திரங்கள் மட்டுமே நடித்திருக்கிறார்கள். பெண் கதாபாத்திரங்களை வேண்டுமென்றே இல்லாததுபோல், கதையை அமைக்கவில்லை. கதைக்கு அவர்கள் தேவைப்படவில்லை. அவ்வளவுதான். இதுவரை சொல்லப்படாத கதைகளத்தில் இத்திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம். என்றார்.




