2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் |
2022ம் ஆண்டு கொரோனா ஒமிக்ரான் அலையுடன் ஆரம்பமானது. ஜனவரி மாதத்தில் 14 படங்களும், பிப்ரவரி மாதத்தில் 11 படங்களும் தியேட்டர்கள், ஓடிடி தளங்களில் வெளியாகின. ஆனால், மார்ச் மாதத்தில் கடந்த இரண்டு வாரங்களில் தியேட்டர்களில் மூன்றே மூன்று படங்கள் மட்டுமே வெளிவந்தது. முதல் வாரத்தில் 'ஹே சினாமிகா, முதல் மனிதன்' ஆகிய படங்களும், இரண்டாவது வாரத்தில் 'எதற்கும் துணிந்தவன்' படம் மட்டுமே வெளிவந்தது.
இந்த மூன்றாவது வாரத்தில் நாளை மறுதினம் மார்ச் 18ம் தேதி “கள்ளன், குதிரைவால், யுத்த சத்தம்” ஆகிய மூன்று படங்கள் வெளியாக உள்ளன. இந்த மூன்று படங்களுமே மினிமம் பட்ஜெட் படங்கள்தான். அடுத்த வாரம் மார்ச் 25ம் தேதி 'ஆர்ஆர்ஆர்' படம் தமிழகத்திலும் பெரிய அளவில் வெளியாக உள்ளதால் இந்த மாதத்தில் வெளியாகும் நேரடி தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும்.
ஏப்ரல் மாதத்தில் வாரத்திற்கு இரண்டு, மூன்று முக்கிய படங்கள் வெளியாகும் எனத் தெரிகிறது. சில படங்களின் வெளியீட்டுத் தேதியும் அறிவிக்ப்பட்டுள்ளது.