‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! | பிளாஷ்பேக்: சித்ராவை ஏமாற்றிய முதல் பாடல் | படம் இயக்கவே சினிமாவிற்கு வந்தேன்: செம்மலர் அன்னம் |

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரும்பாலான மக்களின் பேவரைட் ஷோ என்றால் அது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி தான். இதில் கலந்து கொள்ளும் பல பிரபலங்களுக்கு சினிமா வாய்ப்பு கிடைத்து பெரிய ஸ்டாராக வலம் வருகிறார்கள். தற்போது சீசன் 3 ஆரம்பமாகி ஸ்ருதிகா, வித்யுலேகா ராமன், சந்தோஷ் பிரதாப், சிவாங்கி, புகழ், மணிமேகலை என பல முக்கிய பிரபலங்கள் விளையாடி வருகின்றனர். தற்போது அந்நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரி ரவுண்டு வந்துள்ளது. அதில் ஒரு இளம் அழகிய நடிகை வரப்போவதாகவும், அது தேஜூ அஸ்வினி தான் எனவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், தேஜு அஸ்வினி குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு நோ சொல்லியுள்ளார்.
டிக் டாக் பிரபலம், டான்சர் மற்றும் நடிகை என பன்முக திறமை கொண்டவர் தேஜூ அஸ்வினி. 'பாரீஸ் ஜெயராஜ்', 'என்ன சொல்ல போகிறாய்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். தேஜு, குக் வித் கோமாளியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைவது குறித்து ரசிகர் ஒருவர் அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள தேஜு அஸ்வினி , 'நஹீ... சத்தியமா இல்ல... எனக்கு சமைக்கவும் தெரியாது' என பதிலளித்துள்ளார். அப்படியானால் வைல்ட் கார்டு என்ட்ரியாக களமிறங்கும் இளம் நடிகை யார்? என்ற தேடலில் நெட்டீசன்கள் இண்டர்நெட்டை அலசி வருகின்றனர்.