காலையில் தெலுங்கு முறைப்படி, மாலையில் கொடவா முறைப்படி…விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணம் | சிம்புவை வைத்து வரலாற்று படத்தை திட்டமிட்ட ராஜூ முருகன்! | சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய பிரதீப் ரங்கநாதன்! | திருமணத்தை நம்ப முடியவில்லை : அமலாபால் ஓபன் டாக் | ஜி.வி.பிரகாஷின் 'மென்டல் மனதில்' படத்தின் முதல் லிரிக்கல் வீடியோ வெளியானது! | டிஸ்சார்ஜ் ஆன பாரதிராஜா: வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் | சிவகார்த்திகேயன் அம்மாவாக ரம்யா நம்பீசன் | சினிமா இயக்குவதை மறந்துவிட்டேனா? நடிகர் சமுத்திரக்கனி பதில் | மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பாரதிராஜா : வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் | ரஜினிகாந்த், சிபி படத்தில் இணையும் பசில் ஜோசப், பிரியங்கா மோகன் |

தமிழில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான அருவி என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் அதிதி பாலன். அந்த ஒரு படத்திலேயே கவனிக்கத்தக்க கதாநாயகியாக மாறிவிட்ட அதிதி பாலன், கடந்த வருடம் மலையாளத்தில் பிரித்விராஜூடன் இணைந்து கோல்ட் கேஸ் என்கிற படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக அவர் நடித்துள்ள படவேட்டு என்கிற படம் விரைவில் ரிலீஸாக தயாராகி வருகிறது.
இது ஒருபக்கமிருக்க சோசியல் மீடியாவில் அவ்வப்போது கவித்துவமாகவும், தத்துவமாகவும் பதிவுகளை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருபவர்தான் அதிதி பாலன். அந்த வகையில் தற்போது தனது ''சின்னச்சின்ன ஆசைகள்' என்னென்ன என்பதை அடுக்கடுக்காக பட்டியலிட்டுள்ளார் அதிதி பாலன்.
அவர் வெளியிட்ட பதிவில், “காட்டில் இருக்க வேண்டும்.. அற்புதமான பகுதிகளுக்கு மலை ஏற்றம் செல்ல வேண்டும்.. பறவைகள் மற்றும் பூச்சிகளின் சத்தங்களை கவனிக்க வேண்டும். அருகில் ஓடும் நீரோடையின் சலசலப்பை கேட்டு ரசிக்க வேண்டும். சூரியன் மறையும் அழகான தருணங்களை பார்த்து ரசிக்க வேண்டும்.. பயணிக்கும்போது எல்லாம் புதுப்புது மனிதர்களை சந்திக்க வேண்டும்.. தாவரங்கள் மற்றும் பறவைகளின் பெயர்களை கேட்டறிந்து கற்றுக் கொள்ள வேண்டும். தொலைத்தொடர்பு சாதனங்களில் இருந்து விலகி நிற்க வேண்டும். எந்தப்பகுதியில் பயணிக்கின்றேனோ அங்கே கிடைக்கும் உணவுகளையே உண்ண வேண்டும். குறிப்பாக அமைதி வேண்டும். இவையெல்லாம் என்னுடைய ஆசைகளில் சில” என்று குறிப்பிட்டுள்ளார் அதிதி பாலன்.




