பிளாஷ்பேக் : பெரும் வரவேற்பை பெற்ற முக்கோண காதல் கதை | பிளாஷ்பேக்: சிவாஜி நடித்த கேரக்டரில் எம்ஜிஆர் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'மக்காமிஷி' | தமிழ்நாடு தி பியுட்டி : சோபிதாவின் டூர் டைரி | தென்னிந்திய நடிகர் மீது தமன்னா குற்றச்சாட்டு | பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் |
தனது கணவர் நடிகர் தனுஷுடனான விவாகரத்து குறித்து அறிவித்த பின்பு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார் ஐஸ்வர்யா. பத்து வருடங்களுக்கு முன் தனுஷ் நடித்த '3' படத்தை இயக்கிய ஐஸ்வர்யா, அதன்பின் வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது முசாபிர் என்கிற ஆல்பத்தை மூன்று மொழிகளில் இயக்கி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ராகவா லாரன்ஸை சந்தித்து பேசியுள்ளார் ஐஸ்வர்யா இதுகுறித்த புகைப்படங்களையும் அவர் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளதுடன் இந்த சந்திப்பு மிகுந்த உற்சாகத்தை தருகிறது என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து அவர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படம் ஒன்றை இயக்க போகிறார் என்றும் அதற்காகத்தான் அவரை சந்தித்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. தற்போது இதில் இன்னும் கூடுதலாக லாரன்ஸ் நடிப்பதாக இருந்த துர்கா படத்தைத்தான் ஐஸ்வர்யா இயக்கப்போகிறார் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.
இந்த படத்தை ஸ்டன்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் ஆகியோர் தான் இயக்குவதாக கடந்த ஜனவரியில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தங்களது பணிச்சுமை காரணமாக இந்தப்படத்தை இயக்குவதில் இருந்து நாங்கள் விலகிக்கொள்கிறோம் என சமீபத்தில்தான் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்தநிலையில் ராகவா லாரன்ஸை ஐஸ்வர்யா சந்தித்திருப்பதால், அது துர்கா படத்துடன் தொடர்புபடுத்தி பேசப்படுகிறது. மேலும் லாரன்சை சந்தித்தபோது தற்போது தான் இயக்கியுள்ள முசாபிர் என்கிற ஆல்பத்தையும் அவருக்கு ஐஸ்வர்யா போட்டுக்காட்ட, அதை பார்த்து லாரன்ஸ் ரொம்பவே இம்ப்ரெஸ் ஆகிவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.