விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

ஞானவேல்  இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் ஜெய் பீம். இந்தப்படத்தில் வன்னியர்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக பாமக எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து படத்தில் சில காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டன. அதேசமயம் எந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் ஜெய் பீம் படம் எடுக்கப்படவில்லை என்று சூர்யா ஒரு விளக்கம் கொடுத்திருந்தார். ஆனால் பாமகவினர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி வந்தனர். 
இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் மார்ச் 10 ஆம் தேதியான நாளை திரைக்கு வருகிறது. இதையடுத்து   கடலூரில் எதற்கும் துணிந்தவன் படத்தை வெளியிட தடை விதிக்க கோரி பாமக சார்பில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதோடு தியேட்டர் அதிபர்களுக்கும் அப்படத்தை வெளியிடக்  கூடாது என்று பாமக சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். குறிப்பாக, வன்னியர் மக்களிடம் நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்காத வரை அவரது படத்தை வெளியிடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என பாமக சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் நாளை எதற்கும் துணிந்தவன் படம் திரைக்கு வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடிகர் சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.