'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வளர்ந்து நிற்கும் விஜய் அறிமுகமான படம் நாளைய தீர்ப்பு. இது எல்லோரும் எளிதில் சொல்லி விடுவார்கள். இதே படத்தில் நாயகியாக அறிமுகமானவர் கீர்த்தனா. விஜய்யுடன் இணைந்ததை அடுத்து அஜித்துடன் பவித்ரா பட த்தில் இணைந்து நடித்தார்.
பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்தவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, நாளைய தீர்ப்பு படத்தில் விஜய்யுடன் நடிக்க 31 பேர் ஆடிஷனுக்கு வந்து தேர்வாகவில்லை. 32 வது ஆளாக போன நான் தேர்வானேன். மறுபடியும் விஜய், அஜித்துக்கு பிளாஷ்பேக் ஹீரோயினா நடிக்க வாய்ப்பு கிடைச்சா நிச்சயம் பண்ணுவேன். திரைப்படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்கணும்னு காத்திருக்கிறேன். நல்ல கதைக்களம் அமைஞ்சா நிச்சயம் சினிமாவிலும் ரீ-என்ட்ரி தான்'. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.