ரஜினியின் ‛மனிதன்' அக்டோபர் 10ம் தேதி ரீ ரிலீஸ் | பெரிய ஹீரோகளின் புதுப்படங்கள் வரல : பழைய படங்கள் ரீ ரிலீஸ் | போலீஸ் ஸ்டேஷக்கு பிரச்னை : சம்பளத்தை குறைத்து வாங்கிய நட்டி | தனுஷ் மனதில் மாற்றம் ஏன் : ஊர், ஊராக சுற்றுவது ஏன் | எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் செய்த உதவி : மூத்த நடி எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | திரிஷ்யம் 3: பூஜையுடன் ஆரம்பம் | மோகன்லாலுக்கு மம்முட்டி, சிரஞ்சீவி வாழ்த்து | சாலைவாசிகளுக்கு போர்வை வழங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் | படப்பிடிப்பில் விபத்து: கொதிக்கும் எண்ணெய் கொட்டி சான்வி காயம் | 'தாதா சாகேப் பால்கே' விருது மலையாள சினிமா கலைஞர்களுக்கு சமர்ப்பணம்: மோகன்லால் |
உன்னை சரணடைந்தேன், நிறைஞ்ச மனசு, நாடோடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கி விட்டு நடிகர் ஆனவர் சமுத்திரகனி. கடைசியாக விநோதய சித்தம் படத்தை இயக்கினார். தற்போது தந்தையின் வழியில் இயக்குனராகி இருக்கிறார் சமுத்திரகனியின் மகன் ஹரி விக்னேஷ்வரன்.
இயக்கத்தின் மீது ஆர்வம் கொண்ட ஹரி அறியா திசைகள் என்ற தலைப்பில் 40நிமிட குறும்படத்தை எழுதி இயக்கி, நடித்துள்ளார். வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞன் எப்படி ஏமாற்றப்பட்டு அறியா திசைகளில் பயணிக்கிறான் என்று இந்த படத்தில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஹரி விக்னேஷ்வரன்.
இந்த படம் தற்போது யூ டியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார் ஹரி. தந்தையை போன்றே இயக்கம், நடிப்பு இரண்டும் பயணம் செய்ய திட்டமிட்டிருக்கிறார் ஹரி.