ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் | விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் | இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் | வீர தீர சூரன் 2 : அடுத்த வாரம் ஓடிடி ரிலீஸ் | ஆங்கிலத்தில் பேசச் சொன்ன தொகுப்பாளர் : தமிழில்தான் பேசுவேன் என்ற அபிராமி | முதல் பட ஹீரோ ஸ்ரீ-க்கு ஆதரவாக லோகேஷ் கனகராஜ் |
ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி வீர மரணம் அடைந்த வேலு நாச்சியார். ஜான்சி ராணிக்கும் முன்னோடியாக திகழ்ந்தவர். ஆங்கிலேயர்களின் சதியால் கணவனை இழந்த பிறகு தனியாக படை திரட்டி கொரில்லா போர் மூலம் ஆங்கிலேயர்களை விரட்டி அடித்து இழந்த ராஜ்யத்தை மீண்டும் கைப்பற்றியவர்.
வேலு நாச்சியாரின் 292வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. வழக்கமாக இது சிறு செய்தியாக கடந்து விடும். நேற்றைய பிறந்த நாள் கவனம் பெற்றது. இதற்கு காரணம் பிரதமர் மோடி வாழ்த்து சொன்னதுதான். அவர் தனது வாழ்த்து செய்தியில் "வேலு நாச்சியாரின் வீரமும், துணிச்சலும் எதிர்கால தலைமுறையினருக்கு எழுச்சியூட்டக்கூடியவை. அடக்குமுறையை எதிர்த்து போராடிய அவரது ஆளுமை வியப்பிற்குரியது. மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்தியவர்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் வேலு நாச்சியாரின் வாழ்க்கையை சினிமாவாக இயக்கப்போவதாக சுசி.கணேசன் அறிவித்துள்ளார். இவர் பைவ் ஸ்டார், கந்தசாமி, திருட்டுபயலே உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
தமிழக பெண்களின் வீரத்தை இந்த உலகிற்கு எடுத்துக்காட்டிய வீர மகா ராணி வேலுநாச்சியரின் வீர வாழ்க்கை வரலாற்றை திரை வடிவமாக கொண்டுவரும் முயற்சியை இந்நாளில் பெருமையோடு அறிவிக்கிறேன். இந்திய பிரதமர் நரேந்திர மோடி வேலு நாச்சியார் அம்மையாரை நினைவுகூர்ந்து வாழ்த்தியதில் படைப்பாளியான என் பேனா முனைக்கு மேலும் ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளது.
இந்த திரைப்படத்தின் மூலம் ஆங்கிலேயர்களோடு போரிட்டு, வென்ற முதலும் கடைசியுமான வீர தமிழச்சியின் மாவீரம் எத்தகையது என்பதை இன்றைய தலைமுறைக்கும் கொண்டுபோய் சேர்ப்பதோடு , உலகமே கொண்டாட வைத்துவிடலாம். என்கிறார்.