'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி |
கொரோனா தொற்று ஏற்பட்ட பிறகு மலையாள சினிமா மொத்தமாக முடங்கி விட்டது. அதனால் ஓடிடி தளங்கள் அங்கு வேமாக வளர்ந்து வருகிறது. மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் 2 ஓடிடி தளத்தில் வெளியானது 3 படங்களுமே தயாரிப்பாளருக்கும், ஓடிடி தளத்திற்கும் லாபத்தை கொடுத்தது. நயன்தாரா நடித்த நிழல் படம் ஓடிடியில் வெளிவந்தாலும் அது பெரிய வரவேற்பை பெறவில்லை.
கொரோனா தொற்றுக்கு பிறகு முதன் முதலில் வெளியானது பகத் பாசில் நடித்த சி யூ சூன் என்ற திகில் படம். ஊரங்கு காலத்தில் செல்போனில் படம்பிடிக்கப்பட்ட இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றது. அதன்பிறகு மிக குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ஜோஜி படம் வெளியானது. அதுவும் வெற்றி பெற்றது.
தற்போது பகத் பாசிலின் 3வது படமாக மாலிக் வெளியாக இருக்கிறது. மகேஷ் நாராயணன் இயக்கத்தில், உருவாகியிருக்கும் இந்த படம் கடந்த மாதம் 13ம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் திரையரங்குகள் மூடப்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது படத்தை ஓடிடியில் வெளியிடப்போவதாக தயாரிப்பாளர் சங்கத்திற்கும், தியேட்டர் அதிபர்கள் சங்கத்திற்கும் தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப் கடிதம் எழுதியுள்ளார். ஆண்டோ ஜோசப்பின் முடிவை எதிர்க்கப் போவதில்லை என்று கேரள திரையரங்க உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதன் மூலம் பகத் பாசில் ஓடிடி வெளியீட்டில் ஹாட்ரிக் அடிக்கிறார்.