கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா |
சமீபத்தில் தெலுங்கில் அறிமுக நடிகர்களான வைஷ்ணவ் தேஜ், க்ரீத்தி ஷெட்டி மற்றும் முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான 'உப்பென்னா' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அறிமுக இயக்குனர் புஜ்ஜிபாபு இயக்கிய இந்தப்படத்தை பிரபல இயக்குனர் சுகுமார் தயாரித்திருந்தார். திரையுலக பிரபலங்கள் பலரும் இந்தப்படத்தையும் படக்குழுவினரையும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக நடிகர் மகேஷ்பாபுவின் பாராட்டு இயக்குனர் சுகுமாரை ரொம்பவே நெகிழ வைத்துள்ளது.
காரணம் கடந்த ஏழு வருடங்களுக்கு முன் மகேஷ்பாபுவை வைத்து '1 நேனொக்கடினே' படத்தை இயக்கியிருந்தார் சுகுமார். அதன்பிறகு மகேஷ்பாபு மகரிஷி படத்தை முடித்ததும் மீண்டும் சுகுமார் டைரக்சனில் ஒரு படம் நடிப்பதாக இருந்தது. ஆனால் கதையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்தப்படம் கைவிடப்பட்டது. அதை தொடர்ந்து தான், அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா என்கிற படத்தை இயக்கி வருகிறார் சுகுமார்.
அதனால் மகேஷ்பாபுவுக்கு சுகுமாருக்கும் மனவருத்தம் இருந்ததாக சொல்லப்பட்டு வந்தநிலையில் சுகுமார் தயாரிப்பில் உருவாகி உள்ள உப்பென்னா படத்தை மகேஷ்பாபு பாரட்டியதன் மூலம் அவர்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதற்கு மகேஷ்பாபுவுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் சுகுமார். அதுமட்டுமல்ல, சமீபத்தில் நடைபெற்ற சுகுமார் மகளின் பூப்பனித நீராட்டு விழாவில் தனது மனைவியுடன் கலந்து கொண்டார் மகேஷ்பாபு. இதன்மூலம் அவர்களது நட்பில் விரிசல் இல்லை என்பதும் தெளிவாகியுள்ளது.