தனுஷ் 56... தமிழரசன் பச்சமுத்து : அப்போ மாரி செல்வராஜ்? | தாய் கிழவி : சிங்கம் புலி நடிப்பை பாராட்டிய கமல் | தெலுங்கு, தமிழ் கலாசாரத்துடன் இணைந்திருக்கிறேன்! ஜான்வி கபூர் | போர் முழக்கம் : வடிவேலுவின் புதிய படம் | கமல் - ரஜினி இணையும் படம் குறித்து அனிருத் வெளியிட்ட அப்டேட்! | விஜய் சேதுபதியை இயக்கும் அஜித் பட இயக்குனர்! | போர் சூழல் : டாக்சிக் ரிலீஸ் ஜூன் 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு | ‛காற்றின் மொழி' இசையில்.... : ‛மெலோடி கிங்' வித்யாசாகர் பாடல்களை மறக்க முடியுமா? | பிளாஷ்பேக்: ராஜாஜி பாராட்டிய சிவாஜிகணேசன் | சிகரெட், மதுவை தொட்டதில்லை: சதீஷ் பெருமிதம் |

பிளஸ்சி இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், பிருத்விராஜ், அமலாபால் மற்றும் பலர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் 'ஆடு ஜீவிதம்'. இப்படம் 25 நாட்களில் 150 கோடி வசூலைக் கடந்துள்ளது. உலகம் முழுவதும் இதன் அலை பரவியுள்ளது. உங்களதுஅன்பான ஆதரவுக்கு நன்றி என படத்தின் கதாநாயகன் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்.
படம் வெளியான 3 நாட்களில் 50 கோடி, 10 நாட்களுக்குள் 100 கோடி, 25 நாட்களுக்குள் 150 கோடியை வசூலித்துள்ளது. இந்த ஆண்டில் மலையாளத்தில் வெளியான படங்களில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படம் 200 கோடிக்கு அதிகமாக வசூலித்து முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்து 150 கோடி வசூலித்து 'ஆடு ஜீவிதம்' இரண்டாவது இடத்தில் உள்ளது. 'பிரேமலு' படம் 130 கோடியைக் கடந்துள்ளது.
மலையாளத்தில் ஒரே ஆண்டில் இரண்டு படங்கள் 150 கோடி வசூலைக் கடப்பது இதுவே முதல் முறை. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் இதுவரை வெளியான படங்களில் ஒரு படம் 100 கோடி வசூலைக் கடக்கவில்லை.




