இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் | வீர தீர சூரன் 2 : அடுத்த வாரம் ஓடிடி ரிலீஸ் | ஆங்கிலத்தில் பேசச் சொன்ன தொகுப்பாளர் : தமிழில்தான் பேசுவேன் என்ற அபிராமி | முதல் பட ஹீரோ ஸ்ரீ-க்கு ஆதரவாக லோகேஷ் கனகராஜ் | மொழிப்போர் நடக்குற நேரம்... இது எங்க மும்மொழித் திட்டம் : தக் லைப் பட விழாவில் கமல் பேச்சு | 'மண்டாடி' : சூரியின் அடுத்த படம் | மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ... தவறான தகவல்களை பரப்பாதீங்க.... : குடும்பத்தினர் அறிக்கை | என்னை பற்றி என் தயாரிப்பாளர்களிடம் கேளுங்கள்: பாலிவுட் பாடகருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் | பிளாஷ்பேக் : மம்பட்டியான் பாணியில் உருவான கொம்பேறி மூக்கன் | தன்னை போன்று குறைபாடு உடையவரையே மணந்த அபிநயா |
தமிழ் படங்களில் ஒரு கதாநாயகி இருந்தாலும் கூட கவர்ச்சிக்காகவும் வியாபாரத்திற்காகவும் இன்னொரு கதாநாயகியை வலிந்து திணித்துவரும் சூழலில், மலையாள திரையுலகை சேர்ந்த இயக்குனர் ஜித்து மாதவன் என்பவர் தான் இயக்கிய இரண்டு படங்களிலுமே கதாநாயகிகளே இல்லாமல் படத்தை உருவாக்கி இரண்டு படங்களையும் சூப்பர் ஹிட் ஆக்கியுள்ளார். கடந்த வருடம் ஹாரர் காமெடி படமாக வெளியான ரோமாஞ்சம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் அந்த படத்தில் முழுவதுமே இளைஞர்களை மையப்படுத்தி மட்டுமே ஹாரர் கலந்த காமெடி படமாக கொடுத்திருந்தார். இதில் கதாநாயகி இல்லை என்பதுடன் பெண் கதாபாத்திரங்கள் என்பதே வெகு சில நிமிடங்கள் வந்து செல்வதாக தான் இருந்தன.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பஹத் பாசில் நடிப்பில் வெளியான ஆவேசம் திரைப்படத்தையும் இவர்தான் இயக்கியிருந்தார். இது காமெடி கலந்த கேங்ஸ்டர் படமாக உருவாகியிருந்தது. இந்த படத்திலும் கதாநாயகி இல்லாமலேயே உருவாக்கியுள்ளார் ஜித்து மாதவன். கதாநாயகிகளுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுப்பதில்லை, இதையே டிரெண்டாக மாற்றி விட்டீர்களா என சமீபத்தில் இயக்குனர் ஜித்து மாதவனிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜித்து மாதவன், “அப்படியெல்லாம் இல்லை. கதையை மட்டுமே மனதில் வைத்து எழுதுகிறேன் அதில் கதாநாயகி கதாபாத்திரம் தேவைப்பட்டால் நிச்சயம் அதை மறுக்கப் போவதில்லை. ஆனால் எனது இரண்டு படங்களிலும் கதாநாயகிகளுக்கான இடம் என்பது தேவைப்படவில்லை என்பதுதான் உண்மை. வரும் படங்களில் கதைக்கு தேவைப்பட்டால் நிச்சயமாக கதாநாயகி கதாபாத்திரத்தை இணைத்துக் கொள்வேன்” என்று கூறியுள்ளார்.