விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

இந்திய சினிமாவின் முக்கியமான படமாக கொண்டாடப்பட்டு வருகிறது 'ஆடுஜீவிதம்'. பிளஸ்சி இயக்கத்தில் பிருத்விராஜ் நடித்துள்ள இந்த படம் அரேபிய பாலைவனத்தில் அடிமையாக்கப்பட்ட ஒரு மலையாள இளைஞன் பற்றிய கதை அம்சத்தை கொண்டது.  16 வருட திட்டமிடல், 6 வருட உழைப்பு. கொரோனா உள்ளிட்ட பிரச்சினைகள் இவற்றை கடந்து சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படியான படம் வெளியான சில நாட்களிலேயே நல்ல தொழில்நுட்ப தரத்துடன் இணையத்தில் கசிந்துள்ளது திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் பிளஸ்சி எர்ணாகுளம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். 
“இந்த படம் பாலைவனத்தில் வியர்வையும், ரத்தமும் சிந்தி உருவாக்கப்பட்டது. இது இணையத்தில் கசிந்ததால் தயாரிப்பாளர்களுக்கு  பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும். படம் வெளியான சில மணி நேரங்களிலேயே கனடாவில் இருந்து இணையத்தில் கசிந்துள்ளது” என்று தனது புகாரில் உள்ளார். அதோடு அதற்கான ஆதாரத்தையும் போலீசிடம் கொடுத்துள்ளார்.
 
  
  
  
  
  
           
             
           
             
           
             
           
            